2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கனேடியப் பிரதிநிதிகள் கேட்டறிவு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 12 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யுத்தத்திற்கு பின்னரான வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பிலும் அவர்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பிலும் கனேடியப்  பிரதிநிதிகள் கேட்டறிந்துகொண்டுள்ளனர்.

கனேடியப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை  சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் கனேடியப் பிரதிநிதிகள் கேட்டறிந்துகொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் கனேடிய  நாட்டு நாடாளுமன்றச் செயலாளரும்  பொதுநலவாய மாநாட்டுக்கான கனேடியப் பிரதிநிதியுமான டீபக் ஒவ்ஹ்ரய், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .