2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் அனர்த்த முன்னாயத்தச் செயற்றிட்டங்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 12 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக அனர்த்த முன்னாயத்தச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிலையத்தின்  பிரதிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 மில்லியன் ரூபா நிதியைக்; கொண்டு அனர்த்தத்திற்கு முன்னரான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கூறினார். 

யாழ். மாவட்டத்தில் அதிகளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளான சக்கோட்டை, வடலியடைப்பு, மணியந்தோட்டம், இராஜகிராமம், செம்பியன்பற்று, காரைநகர், நாவாந்துறை, சங்கானை ஆகிய பகுதிகளில் இச்செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச்செயற்றிட்டங்களின் மூலம் வடிகாலமைப்புக்களை புனரமைத்தல், கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .