2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்குக்கு இடமில்லை: குருகுலராஜா

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம்


'ஆசிரியர்களின் இடமாற்ற விடயங்களில் கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு இருந்ததாகவும் இனிமேல் அவ்வாறு நடக்க இடமளிக்கமாட்டேன்' என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று புதன்கிழமை (13) தெரிவித்தார்.

அச்சுவேலி புனித திரேச மகளிர் கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான கௌவரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'நாங்கள் அனைவரும் புதிய பாதைக்கு செல்ல வேண்டுமாயின் மாணவர்களின் கல்வி வளர்ச்சி சிறப்பாக அமையவேண்டும். அதற்கு ஆசிரியர்களின் செயற்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததுடன், இதற்காக ஆசிரியர்கள் கஷ்டப் பிரதேசங்களிலும் சேவை செய்யத் தாயாராக இருக்க வேண்டும்.

அத்துடன், இந்தப் பாடசாலையில் பூரணப்படுத்தப்படாமல் இருக்கும் மேல்மாடிக் கட்டிடத்  தொகுதியினை விரைவில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துத் தருவதாகவும்' அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .