2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 15 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றத்தினை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளச் சென்ற கயஸ் வாகனம் ஒன்றின் மீது வடமராட்சியில் வைத்து மண் நிரப்பிய சோடா போத்தல்களினால் தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை (15) காலையில் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினாலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எனினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற குறிப்பிட்ட கயஸ் வாகனம் மக்களை ஏற்றிக்கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அங்கு சென்ற பஸ் ஒன்றின் மீது வல்வைப் பகுதியில் வைத்து கழிவு ஒயில் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .