2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பெண்ணைக் கத்தியால் குத்தியவருக்கு வாள்வெட்டு

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.புன்னாலைக்கட்டுவான் ஈவினைப் பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் குத்தியவர் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகினார்.

இது பற்றி தெரியவருவதாவது,

மேற்படி பிரதேசத்தினைச் சேர்ந்த சசிதரன் ராதிகா (32) என்பவரது கணவரை நேற்று வெள்ளிக்கிழமை (15) நண்பகல் நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.
'கணவனை ஏன் தாக்கினாய்' எனக் கேட்கச் சென்ற மனைவி மீது குறிப்பிட்ட நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இனந்தெரியாத நபர்கள் சிலர் நேற்று இரவு (15) பெண்ணை கத்தியால் குத்திய நபரை வாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .