2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு இணையமாக பெயர் மாற்றம்

Kogilavani   / 2014 ஜனவரி 15 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பானது வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் என்று பெயர் மாற்றம் பெற்று எதிர்காலத்தில் இயங்குமென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தார்.

தற்போது பெயர் மாற்றம் பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தில் இன்று மதியம் 2.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜேசுதாசன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் மகாசபை கூட்டம் இன்று (15) காலை நடைபெற்றது. இதன்போது, கூட்டமைப்பு என்ற பெயரை இணையமாக மாற்ற வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று (15) முதல் வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பு வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையமாக செயற்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .