2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையில் நரம்பியல் பிரிவு திறப்பு

Super User   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். போதனா வைத்தியசாலையில் நரம்பியல் ஆய்வு பிரிவு இன்று திறந்துவைக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் நிபுணர் டாக்டர் அஜந்தா கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தேசிய வைத்தியசாலை சிரேஷ்ட நரம்பியல் நிபுணர் பேராசிரியர் ரஞ்சனி ஹமகே கலந்துகொண்டு நரம்பியல் பிரிவினை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, நாக விகாரையின் விகாராதிபதி விமலதேரர், நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள், வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம், மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .