2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வான் மோதியதில் முதியவர் பலி: சாரதி தப்பியோட்டம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வானொன்று இன்று காலை 9.30 மணியளவில் வீதியை கடக்க  முயன்ற  நெல்லியடி வதிரியைச் சேர்ந்த பொன்னம்பலம் தங்கராசா ராசாகோபன் (65) என்பவரை மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நெல்லியடி கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் இடம்பெற்றது.

இதனையடுத்து குறித்த வாகனச் சாரதி வாகனத்தினை அவ்விடத்திலேயே விட்டு தப்பியோடியுள்ளார் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.  

மரணமடைந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .