2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விபசார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டத்தில் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் விபசார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று (07) தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது 'யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் விபசாரம் நடைபெறுகின்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?' என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், 'யாழ்ப்பாணத்து கலாசாரம் புனிதமாக பேணப்பட்டு வருகின்றது. அதனை கெடுக்கும் முகமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கான சட்ட நடவடிக்கை எடுப்போம்' என்று கூறினார். 

'அந்த வகையில், இவ்வாறான மசாஜ் நிலையங்கள் மீது புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலன்விசாரணையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வோம்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .