2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு: இருவருக்கு பொலிஸ் பிணை

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.தொண்டமனாறுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைதான சாவகச்சேரி, மாத்தறைப் பகுதிகளைச்; சேர்ந்த இருவரும் பொலிஸ் பிணையில் இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸ்நிலைய சிறுகுற்ற தடுப்பு உதவிப் பொலிஸ் அதிகாரி; வி.கே.எஸ்.ஏ.ரோஹன தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி இருவரு நேற்று கைதுசெய்யப்பட்டதுன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையத்தில் வாகனங்களை தடுத்து வைத்துள்ளனர்.

இவர்களுக்கு எதிர்வரும்  திங்கட்கிழமை (17) மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்  செய்யவுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .