2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இராணுவ அதிகாரிக்கு எதிராக நால்வர் சாட்சி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நாவற்குழி முதல் தனங்கிளப்பு வரையில் 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி நடத்தப்பட்ட இராணுவச் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட துமிந்த என்னும் இராணுவ அதிகாரிக்கு எதிராக காணாமற்போனோரின் நான்கு உறவினர்கள் நேற்று சனிக்கிழமை (15) சாட்சியமளித்தனர்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் முதல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த சாட்சியமளிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்றது.  

இன்றைய சாட்சியமளிக்கும் நிகழ்விற்கு 59பேருக்கு அழைப்பு கடிதங்கள் வழங்கப்பட்ட போதும் 42 வரையில் மட்டுமே சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், 49 பேரில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு கொண்டுவர தீர்மானம் எடுத்த இருவர், ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலையில் ரகசிய வாக்குமூலங்களை அளித்தனர்.

இந்த சாட்சியமளிக்கும் நடவடிக்கை இன்றும் நாளையும் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .