2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கடலை உண்ட வைத்தியசாலை ஊழியர்களுக்கு வாந்தி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தெல்லிப்பளை வைத்தியசாலை ஊழியர்கள் ஐந்து பேர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இன்று (19) காலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், இன்று காலை உட்கொண்ட உணவு விசமாகியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெல்லிப்பளை வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கொண்டு வந்த கடலையினை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மேற்படி ஐந்து பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X