2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இராணுவ வீரரினால் கைவிடப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இராணுவ வீரர் ஒருவரினால் கைவிடப்பட்ட பெண் கிணற்றில் குதிக்க முற்பட்ட வேளை அதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த பெண்ணை காப்பாற்றி தங்களிடம் ஒப்படைத்ததாக சுன்னாகம் பொலிஸார் இன்று (19) தெரிவித்தனர்.

பொலநறுவைச் சேர்ந்த குறித்த பெண்ணும் பலாலி இராணுவ முகாமில் கடமைபுரியும் குறித்த இராணுவ வீரரும் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் நேற்று நண்பகல் (18)  சந்தித்துள்ளனர்.

பின்னர் குறித்த இராணுவ வீரர் அப்பெண்ணை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இராணுவ முகாமிற்குள் சென்றுள்ளார். இதனையடுத்து வசாவிளான் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் குறித்த பெண் குதிக்க முயன்ற வேளை அப்பகுதியிலுள்ள பொதுமக்களால் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X