2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்திற்கு சிறிய ரக உழவு இயந்திரம் அன்பளிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண விவசாய அமைச்சினால் யாழ்.மாவட்டத்தில் இயங்கிவரும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் விவசாயத் தேவைகளுக்கென சிறிய உழவு இயந்திரம் ஒன்றை கண்டி வீதி, அரியாலையில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சின் செயலகத்தில் வைத்து வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் புதன்கிழமை (19) வழங்கி வைத்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

'யாழ். மாவட்டத்தில் வசிக்கும் 300இற்கும் மேற்பட்ட செவிப்புலன் அற்றோர் இணைந்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாகச் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முயற்சிகளில் ஒன்றாகச் சிறுவிவசாயப் பண்ணையொன்றை நிர்வகித்து வரும் செவிப்புலன் வலுவற்றோர், வடமாகாண விவசாய அமைச்சரிடம் சிறிய ரக உழவு இயந்திரத்தை  கோரி விண்ணப்பித்திருந்தனர். இதனடிபடையிலே இவ்வியந்திரம் கையளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட பத்துப் பயனாளிகளுக்கு விவசாயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் நீரிறைக்கும் இயந்திரங்கள்; வழங்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன், கைதடி நவீல்ட் பாடசாலையின் அதிபர் மகேந்திரன் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு உழவு இயந்திரத்தையும், நீரிறைக்கும் இயந்திரங்களையும் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .