2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிறேம்சங்கர் நியமனம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்னிலையில் நேற்று (20)  இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை  யாழ். குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக அன்னலிங்கம் பிரேம்சங்கர், முஹமட் மக்கி ஆகியோரும், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு ஆணையாளராக கடமையாற்றிய மா.இளஞ்செழியன் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த நியமனங்கள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவினால் இந்த மாதம் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. புதிய நீதிபதிகள் அனைவரும் பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .