2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நண்பனைத் தாக்கியவர் தற்கொலைக்கு முயற்சி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தன்னுடன் கூலி வேலைக்கு வரும் நண்பன், தன்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன் வேலைக்குச் சென்றமையினால் ஆத்திரமடைந்த ஒருவர், தனது நண்பனை கடுமையாகத் தாக்கிவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று யாழ்., கந்தரோடையில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

தற்கொலைக்கு முயற்சித்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர், கந்தரோடை ஆலடியினைச் சேர்ந்த தனது நண்பருடன் தினமும் கூலி வேலைக்கு செல்வது வழமை. இந்நிலையில் நேற்று முன்தினம் (22) இவரது நண்பர், வேறு ஒருவருடன் கூலி வேலை செய்வதற்காகச் சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பரைத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த நண்பர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுன்னாகம் பொலிஸார் சந்தேகநபரின் வீட்டிற்கு சென்றபோது, கேதீஸ்வரன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக குறித்த நபரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .