2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மீசாலையில் பால் அபிவிருத்தி நிலையம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


ஜெர்மன் அரசாங்கமும் கார்கில்ஸ் நிறுவனமும் வடமாகாணத்தில் பசும் பால் உற்பத்தியை  அதிகரிக்கும் நோக்கில் யாழ். மீசாலையில் பால் அபிவிருத்தி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜர்ஜன் மொர்ஹட் திங்கட்கிழமை  (24) இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.

இதனால், மீசாலையிலுள்ள 400 பேர்  பயனடையவுள்ளனர்.  பால் உற்பத்திக்கான பயிற்சிகள் பால் உற்பத்தியாளர்களுக்கு  வழங்கப்படும். மேலும்,  பாலை சிறந்த விலையில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு  வருமானத்தை 50 சதவீதத்திற்கு அதிகமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தூதுவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .