2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ்.மாநகர வாகனங்களில் ஜி.பி.எஸ். டிரக்கர் கருவி

Kogilavani   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மோசடிகளைத் தவிர்க்கும் முகமாக யாழ்.மாநரக சபையிலுள்ள வாகனங்களில் 'ஜி.பி.எஸ் டிரக்கர்' கருவி பொருத்துவதற்காக யாழ்.மாநகர முதல்வரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் புதன்கிழமை (26) மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முதல்வர் கருத்துக் கூறுகையில்,

'யாழ். மாநகர சபையின் வாகனங்களில் இடம்பெறும் டீசல் திருட்டுக்கள், வாகனம் பாவிக்கப்படும் விதம், அத்துடன் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் யார் என கண்டு பிடிப்பதற்காக இந்தக் கருவி பொருத்தப்படவுள்ளதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாநகர சபையின் ஒரு வாகனத்தில் மேற்படி கருவி பொருத்தப்பட்டு பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து 5 வாகனங்களில் முதற்கட்டமாக இந்தக் கருவி பொருத்தப்படவுள்ளன.

இந்தக் கருவிக்காக மாதாந்தம் 1300 கட்டணம் செலுத்தவேண்டும் என்பதுடன், வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஏதாவது பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் போது, அது தொடர்பான 6 மாத கால தரவுகளை இந்தக் கருவியின் மூலம் பெறமுடியும்' என முதல்வர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .