2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வலிகாமம் பாடசாலைகளுக்கு புதிய அதிபர்களை நியமிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 மார்ச் 05 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் புதிய அதிபர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை வலிகாமம் கல்வி வலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) நடைபெறவுள்ளதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்தார்.

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட, மானிப்பாய் சுதுமலை சின்மய பாரதி வித்தியாசாலை, மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, வட்டுக்கோட்டை திருநாவுக்கரசு வித்தியாலயம், சில்லாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம், பண்ணாகம் வடக்கு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, மாவிட்டபுரம் தெற்கு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, ஆனைக்கோட்டை உயரப்புலம் வித்தியாலயம் ஆகிய 8 பாடசாலைகளிலுள்ள அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காகவே இந்த நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .