2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆலயக் காணியினை பராமரிப்பது தொடர்பில் தகராறு: இருவர் படுகாயம்

Super User   / 2014 மார்ச் 05 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். சுழிபுரம் ஐயனார் ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்ட 900 பரப்பு காணியை பராமரிப்பது தொடர்பில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கோடாரி வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை (05) நடந்த இச்சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த இ.ஜெயரூபன் (வயது 29) மற்றும்  எஸ்.ஜெயச்சந்திரன் (43) ஆகிய இருவருமே தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் மீது மற்றய குடும்பத்தினைச் சேர்ந்த நால்வர் கோடாரிகள், பொல்லுகள் மற்றும் போத்தல்களினால் தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த இவர்கள் முதலில் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .