2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண சபை அமைச்சுக்களுக்கு ஆலோசகர்கள் நியமனம்

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண சபையின் 4 அமைச்சுக்களுக்கும், முதலமைச்சருக்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாணக் கட்டிடத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றபோதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டும் அமைச்சுக்களின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டும் இந்த ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தவிசாளர் தெரிவித்தார்.

அந்த வகையில், வடமாகாணத்தில் கல்வி, சுகாதாரம், மீன்பிடி, சுகாதாரம் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கே இந்த ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆலோசகர்களாக இருப்பதுடன் குறிப்பாக அங்கஜன் இராமநாதன், தர்மபால செனவரத்தின ஆகியோர் முதலமைச்சரின் ஆலோசகர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .