2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 25 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். கொக்குவில் பிறவுண் வீதியில்  சந்தேகத்திற்கிடமாக  நடமாடியதாகக் கூறப்படும் ஒருவரை திங்கட்கிழமை (24) இரவு கைதுசெய்ததுடன், முச்சக்கரவண்டியொன்றையும் வாளொன்றையும்  கைப்பற்றியதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ரஜேஸ்குமார் விஜிந்தன் (வயது 26) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்ற 10 பேர் கொண்ட கும்பலில் 09 பேர்  ரோந்தில் ஈடுபட்ட பொலிஸாரைக் கண்டு தப்பியோடினர்.
இந்நிலையில், இக்கும்பலில் ஒருவரை மாத்திரமே  கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த நபரை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (25) ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .