2021 மே 08, சனிக்கிழமை

பணமோசடி: ஒருவர் பிணையில் விடுதலை

Kanagaraj   / 2014 மார்ச் 25 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

கிளிநொச்சியினைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி 15 இலட்சம் ரூபா பணமோசடி செய்த ஹற்றன் மற்றும் கம்பளைப் பகுதியினைச் சேர்ந்த மூவரில் ஒருவரை 1 லட்சம் ரூபா சரீர பிணை மற்றும் 5 லட்சம் பெறுமதியான 2 ஆள்பிணையிலும் செல்ல யாழ்.நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று (25) அனுமதியளித்தார்.

அத்துடன் ஒவ்வொரு மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

 'குறித்த மூவரும் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சியிலுள்ள நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி ரூபா 15 இலட்சம் பணத்தினை மோசடி செய்துள்ளனர்.

பின்னர், பாதிக்கப்பட்டவர்களினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதினையடுத்து, விNஷட குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த 3 நபர்களையும் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினார்கள்.

தொடர்ந்து, கிளிநொச்சி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் கடந்த 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது சந்தேகநபருக்கு யாழ். மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கமைய இன்று (25) குறித்த மனு தொடர்பான வழக்கு யாழ்;.மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிபதி மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X