2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உதட்டுப்பிளவு, அண்ணப்பிளவுடன் பிறக்கும் குழந்தைகளை முகாமை செய்வது தொடர்பில் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 27 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


உதட்டுப்பிளவு, அண்ணப்பிளவு மற்றும் முகங்களில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை முகாமை செய்வது தொடர்பான கருத்தரங்கு வவுனியா பொது வைத்தியசாலையில் வியாழக்கிழமை (27) நடைபெற்றது. 

வட பிராந்திய உதட்டுப்பிளவு, அண்ணப்பிளவு மற்றும் முக குறைபாடுகளை சீரமைக்கும் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் வடமாகாண மருத்துவ மாதுக்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது உதட்டுப்பிளவு, அண்ணப்பிளவுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், அவ்வாறான குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு உள்ள ஏற்பாடுகள் தொடர்பில் சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் விளக்கமளித்தனர்.

இலங்கையில் வருடந்தோறும் பிறக்கும்  600 குழந்தைகளில்  ஒரு குழந்தை என்ற விகிதத்தில் இவ்வாறான நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சிகிச்சை நிலையத்தின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ரஞ்சன் மல்லவராச்சி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.டி.அமரதுங்க, வைத்திய கலாநிதி பராக்கிரம விஜயகோன், வவுனியா வைத்திசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன், முன்னாள் வவுனியா வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.சத்தியமூர்த்தி, உளநல மருத்துவர் வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .