2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு சட்டவிரோத மணல் அகழ்ந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். கொடிகாமம், கெற்போலி பகுதியில் உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்ல முற்பட்டவரின் உழவு இயந்திரச் சில்லுக்கு ஞாயிற்றுக்கிழமை (30) காலை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன்,  சந்தேகத்தின் பேரில் உழவு இயந்திரச் சாரதியான பொன்னையா நிமலன் (வயது 22)  என்பவரைக் கைதுசெய்ததாகவும்  கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின்போது உழவு இயந்திரச் சாரதி  உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

அத்துடன், குறித்த உழவு இயந்திரத்தை  பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார்  கொண்டு சென்றனர்.

கெற்போலி பகுதியில்  மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்,  பொலிஸார் அவ்விடத்திற்கு வருவதைக் கண்டு உழவு இயந்திரத்துடன் தப்பியோடினார்.  இதன்போது, பொலிஸார் துப்பாக்கியினால் மேல் நோக்கி வெடி வைத்தனர். இருப்பினும்,  சந்தேக நபர் தொடர்ந்து உழவு இயந்திரத்துடன் தப்பியோடிய நிலையில்  உழவு இயந்திரத்தின் சில்லுக்கு  பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .