2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். குருநகர் பகுதியில் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள  கிணற்றிலிருந்து குருநகரைச் சேர்ந்த ஜெரோமி கொன்சிறிட்ட (வயது 22) என்பவரின் சடலம் திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றவர்கள், கிணற்றில்  சடலம் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இதற்கிடையில், தனது மகள் ஞாயிற்றுக்கிழமை  (13) வீட்டிலிருந்து புங்கங்குளம் பகுதிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் இன்னமும் வீடு திரும்பவில்லையென்று யாழ்.  பொலிஸ் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தாய் திங்கட்கிழமை (14) முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .