2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆமையை வெட்டியவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். குருநகரின் தண்ணித்தொட்டியடி பகுதியிலுள்ள வீடொன்றில் 20 கிலோ நிறையுடைய  ஆமையொன்றை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்படும்  27 வயதான  பெண்ணொருவரை சட்டவிரோத தடுப்புப் பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை  கைதுசெய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சட்டவிரோத தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .