2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வயோதிபப் பெண்ணை தாக்கியவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 05 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். நுணாவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு குடியிருந்தவர்களை வெளியேறுமாறு  சொல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அவ்வீட்டுக்குச் சென்ற அவ்வீட்டு உரிமையாளரான நுணாவில் மேற்கைச் சேர்ந்த சற்குணாநந்தன் தயாளசோதி (வயது 78) என்பவரை, அவ்வீட்டிலிருந்த ஒருவர் தாக்கியதால், அவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இத்தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கனடாவில் வசித்துவந்த இவ்வயோதிபப் பெண்,   நாடு திரும்பி  தனது சொந்த ஊரான நுணாவிலில் தற்போது  தங்கியிருக்கிறார்.

இந்நிலையில், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் தவணைக்காலம் முடிவடைந்தமையால்  அவர்களை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கோரியிருந்தார்.

இதன்போது, அவ்வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்கள  ஒரு மாதகால தவணை கேட்;டு வீட்டில் குடியிருந்துள்ளனர். இந்த ஒரு மாத தவணைக்காலமும் முடிந்த நிலையில், வீட்டிலிருந்து  அவர்களை வெளியேறுமாறு வயோதிபப் பெண் மீண்டும் கோரியுள்ளார். இதன்போதும் அவர்கள், மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பில்  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடந்த 12ஆம் திகதி வயோதிபப் பெண்  முறைப்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அவ்வீட்டிலிருந்தவர்களை  அழைத்து பொலிஸார் விசாரித்தனர். இதன்போது, 02 நாட்களில் அவ்வீட்டை விட்டு வெளியேறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும்,  அதிக நாட்களாகியும்  அவர்கள் அவ்வீட்டிலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில், வீட்டிலிருந்தவர்களை  வெளியேறுமாறு சொல்லுவதற்குச் சென்ற வயோதிபப் பெண்ணை அங்கிருந்த சந்தேக நபர்  தாக்கியதுடன், கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். 

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரிடம் வயோதிபப் பெண் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .