2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இளவாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 மே 05 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். இளவாலை சென்.ஜேம்ஸ் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 32 பவுண் தங்கநகைகள்  ஞாயிற்றுக்கிழமை (04) பகல் வேளையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக  இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டிலுள்ளவர்கள் தேவாலயத்திற்குச் சென்றிருந்தபோது, வீட்டின் சமையல் அறையின் புகைப்போக்கி வழியாக உள்நுழைந்த திருடர்கள், அலுமாரியிலிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .