2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நேரசூசியை தவறாக பயன்படுத்தும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 மே 08 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா 

நேரசூசியை பின்பற்றாது செயற்படும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான  பேருந்துச் சாரதிகள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். புன்னாலைக்கட்டுவான் வழித்தடத்தில் தனியார் பேருந்துச் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் நேற்று வியாழக்கிழமை (07) காலையிலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது  தொடர்பில் அமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நேரசூசியை தவறாகப் பயன்படுத்தி தனியார் மற்றும் இ.போ.சபைக்குச் சொந்தமான  பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதால், இரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் நேரசூசியை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் தவறுகள் கண்டுபிடிக்கப்படின், தனியார் மற்றும் இ.போ.ச. பேருந்துச் சாரதிகள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

மேலும், நேரசூசியை உரிய முறையில் பயன்படுத்தி பொதுமக்களுக்கான சேவையை சரியாகவும் நியாயமாகவும்  வழங்குமாறு தனியார் மற்றும் இ.போ.ச. பேருந்து சேவையாளர்களுக்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .