2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 12 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சாவகச்சேரி கல்வயல் பகுதியில் வசித்து வரும் ஒருவர் வேப்பமரத்திலிருந்து கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (12) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியினைச் சேர்ந்த இராசையா ரூபன் (44) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

வேப்பமரக் கிளைகளினை வெட்டுவதற்காக மரத்தில் ஏறியவேளை பிறிதொரு கிளை முறிந்து இவர் மீது சரிந்தமையினாலேயே இவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .