2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ்.மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் மாபெரும் கலந்துரையாடல்

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரிவாகவும் துரிதமாகவும் பரவலாக மேற்கொள்வது மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் உட்பட உடனடித் தேவைகளை படிப்படியாகப் பூர்த்தி செய்வது தொடர்பிலான மாபெரும் கலந்துரையாடல் நிகழ்வு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழி;ல் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் சிறந்த முறையில் எமது மக்களின் பயன்கருதி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், குறிப்பாக, கிராமப் புறங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் பல இனங்காணப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இப்பகுதி மக்களின் நிலையான பொருளாதார வழிவகைகளை பலப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

விவசாயம், கால்நடைகள், கடற்றொழில், கைத்தொழிற்துறைகள் உட்பட ஏனைய அனைத்துத் துறைகளையும் மேலும் பலப்படுத்தி அதனூடான பொருளாதார மூலங்களில் எமது மக்கள் அதிகூடியளவில் எமது மக்கள் பயன்பெறுவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.

எதிர்வரும் காலங்களில் யாழ்.குடாநாட்டில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவக் கூடிய அபாயங்கள் தென்படுகின்ற நிலையில் அதற்கான மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.

இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் உட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்த்திரி அலன்ரின், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா  உட்பட பலர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .