2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நல்லூர்த் திருவிழா தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போதான செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றது.

ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தினை அமைதியான முறையிலும் பாதுகாப்பாகவும் நடத்துவது தொடர்பிலான விடயங்கள் குறித்துக் இக்கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .