2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

குற்றப்புலனாய்வு துறை பொறுப்பதிகாரியாக எம்.கே.இப்னு அசார்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்ற  எம்.கே.இப்னு அசார், அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு துறை பொறுப்பதிகாரியாக கடந்த 09.05.2014இல் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1989 இல் உதவி பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்தார். பின்பு 2002 இல் பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றிருந்தார்.

நாட்டில் யுத்தம் நடைபெட்டிருந்த வேளையில் வடக்கு கிழக்கின் யுத்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக கடமையாற்றி அரசின் பல விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தார். 2001ஆம் ஆண்டு கல்முனையில் நடத்தப்பட்ட புலிகளின் குண்டுத்தாக்குதலில் படுகாயம் அடைந்த இவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .