2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறிய மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் ஏற்பாட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(19) தெல்லிப்பழை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் நிதியுதவியில் 53 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், சேவா லங்கா நிறுவனத்தின் நிதியுதவியில் 96 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களும், 125 விவசாயிகளுக்கு நீர் தெளிக்கும் உபகரணங்களும் 238 விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகளும் வழங்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேச செயலர் எஸ்.ஸ்ரீமோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் வடமாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.தவராசா, சேவா லங்கா நிறுவனத்தின் இணைப்பாளர் மௌலேந்திரன், சிறுவர் பாதுகாப்பு நிதிய இணைப்பாளர் புளோரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .