2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வெடிப்பு சம்பவத்தில் குடும்பப் பெண் காயம்

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயாரான பசுபதி தனலட்சுமி (30) என்பவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது வீட்டு வளவுக்குள்  நாற்று மேடை அமைக்க முற்பட்ட போது அதற்குள் இருந்த வெடியொன்று வெடித்ததில் இவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .