2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மீட்கப்பட்டது உளவு விமானமில்லை

Menaka Mookandi   / 2014 ஜூன் 03 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நகரத்திலுள்ள விடுதியொன்றின் கூரையிலிருந்து திங்கட்கிழமை (02) இரவு மீட்கப்பட்ட சிறிய ரக விமானம், உளவு விமானம் அல்ல எனவும் தொலைபேசி இணைப்பு நிறுவனம் ஒன்று தமது விற்பனை மேம்படுத்தல் செயற்பாட்டிற்காக பயன்படுத்திய விமானமே இதுவெனவும் என யாழ். தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஈ.எம்.சுகத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

குறித்த விமானத்தைப் பயன்படுத்துவதற்கான ஆவணம் அந்நிறுவனத்திடம் உள்ளதெனவும் இது தொடர்பில் ஏற்கெனவே அந்நிறுவனம் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்றிருந்ததாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

விற்பனை மேம்படுத்தல் செயற்பாட்டிற்கான திங்கட்கிழமை (02) மாலை விமானம் பறக்கவிடப்பட்டதாகவும், அதன் மின்கலம் செயலிழந்ததால் விடுதியின் கூரையின் மேல் வீழ்ந்ததாக அவர் கூறினார்.

இதன்படி பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த குறித்த தொலைபேசி இணைப்பு நிறுவன பிரதிநிதிகளிடம் அந்த சிறிய ரக விமானம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X