2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செவிப்புலன் சிகிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் 


யாழ். பலாலி இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், பலாலி இராணுவ வைத்தியர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர்களும் இணைந்து  மேற்கொள்ளும் செவிப்புலன் சிகிச்சை முகாமை யாழ். சிவில் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (09) ஆரம்பமாகியது.

இந்தச் சிகிச்சை முகாமில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த செவிப்புலன் பாதிக்கப்பட்டோர்கள் கலந்துகொள்ளமுடியும்.

மேற்படி சிகிச்சை முகாமில் உபகரணங்கள் அவசியம் தேவைப்படுவோரென  இனங்காணப்படுபவர்களுக்கு விரைவில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுமென யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவாரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .