2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடற்படை உழவு இயந்திரம் மோதி இருவர் படுகாயம்

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன் 

யாழ்.வேலணை சுருவில் அம்;பிகை நகர்ப்பகுதியில் கடற்படையினரின் உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களின் மீது மோதியதில் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில்  செவ்வாய்க்கிழமை (10) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தேவதாஸ் அமலேஸ் (37), ரவிச்சந்திரன் ரவிகீதன் (19) ஆகிய இருவரே  இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

கடற்படையினருக்கு உணவு எடுத்துச் சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு வேகக்கட்டுப்பாட்டினை இழந்து, மேற்படி இருவர் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .