2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 12 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷpசனின் கொலையின் பிரதான குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரனின் வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  போது, கந்தசாமி கமலேந்திரன் மற்றும் டானியல் றெக்ஷpசனின் மனைவி மற்றும் மற்றைய இளைஞர் ஆகியோரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷpசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். அத்துடன் றெக்ஷpசனின் மனைவி மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .