2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்க்கவும்: சமரசிங்க

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்  

'யாழ்.பொலிகண்டி கந்தவனக்கடவை ஆலயத் திருவிழாவிற்கு செல்லும் பத்தர்கள் பெறுமதியான தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்த்துக்கொள்ளும் படியும் வீட்டில் இருக்கும் உடமைகளை பாதுகாக்க ஒருவரையாவது வீட்டுக்காவலில் நிறுத்திவிட்டு செல்லுமாறும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெ.சி.சமரசிங்க வெள்ளிக்கிழமை (13) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொலிகண்டியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் திருட்டுச்சம்பவங்கள் தொடர்பில் கருத்துக்கூறுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'பொலிகண்டி கந்தவனக்கடவை கல்யாண வேலவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இம்மாதம் 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ளது.

கவனயீனமாகவும் சரியான திட்டமிடலின்றிச் செல்லுமபோது,  வீட்டின் உடமைகளை காத்திருந்து சிலர் சூறையாடவும் இரவு வேளைகளில் தங்க ஆபரணங்களை அபகரித்துக்கொண்டு செல்லவும் களம் அமைத்துக்கொடுப்பதாக அமையும்.  

அத்தோடு அண்மைக்காலமாக பொலிகண்டிக் கிராமத்தில் பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அதிலும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு எவ்வித தடயங்களும் இல்லாமல் உடமைகள் திருடப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சம்பவங்கள் கிராமத்திலிருக்கும் விசமிகளின் இரகசிய தகவல்களின் அடிப்படையாக் கொண்டே அன்னியர்களினால் இடம்பெற்று வருகின்றன. 

எனவே மேற்படி ஆலயத்தில் நடைபெறவுள்ள மகோற்சவ தினங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். ஆலய நிர்வாகத்தினரால் பொலிஸாரின் உதவி கோராவிட்டாலும் எமது மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள் என்பதால் 15 நாட்கள் உற்சவ தினத்திலும் இரவு வேளைகளில் பொலிஸார் கடமைக்காக ஈடுபடுத்தப்படுவார்கள்' என அவர் மேலும் தெரிவித்தார்.     

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .