2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சமூக பாதுகாப்பு நிலைய செயற்பாடுகள் அவதானிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன் 


வடமாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள், நுவரெலியா அம்பகமுக பிரதேச செயலகத்தின் சமூக பராமரிப்பு நிலையத்தைப் பார்ப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை (13) சென்றனர்.

இலங்கையில் சமூக பராமரிப்பு நிலையங்களில் தரவரிசையில் இரண்டாமிடத்தினைப் அம்பகமுக பிரதேச சமூக பராமரிப்பு நிலையம் பெற்றிருந்தமையினால் அதன் செயற்பாடுகளை பார்வையிட்டு, அதன்மூலம் வடமாகாண சமூக பராமரிப்பு நிலையங்களை எவ்வாறு கொண்டு நடத்தலாம் என்ற ரீதியில் இந்தப் பயணம் அமைந்திருந்ததாக வடமாகாண சமூக சேவைகள் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீகரன் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தில் வடமாகாணத்தின் 27 சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, அம்பகமுக பிரதேச செயலர் ஏ.டி.எஸ்.பி.ஹேரத் இவர்களை வரவேற்று தங்களது பிரதேச செயலக பிரிவின் சமூக பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

சமூக பராமரிப்பு நிலையங்களினூடாக, பிரதேசத்தின் வறிய மக்களுக்குத் தேவையான உதவிகள், முதியோருக்கான தேவைகள், சிறுவர்களுக்கான தேவைகள் உள்ளிட்டவற்றினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .