2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உயர்கல்வி அமைச்சர் நாளை யாழ். விஜயம்

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்கு 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பேராசிரியர் கூவர் ஞாபகார்த்த கலையரங்கத் திறப்பு விழாவிற்காக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா நாளை சனிக்கிழமை (14) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேற்படி கட்டிடத் தொகுதியானது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முதலாவது பீடாதிபதி பேராசியர் கூவர் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டது.

மருத்துவபீட வளாகத்தின் பிரதான கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில்  அமைந்துள்ள இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லானது, 1980ஆம் ஆண்டு நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .