2025 ஜூலை 02, புதன்கிழமை

கவுணாவத்தை மிருக வேள்வி

Kanagaraj   / 2014 ஜூன் 14 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த்


நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். கீரிமலை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலய வேள்ளி சனிக்கிழமை(14) அதிகாலை இடம்பெற்றது.

இந்த வேள்வியில், பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் சோதனைக்கு பின்னர், 400 இற்கும் அதிகமான கிடாய் ஆடுகள் வெட்டப்பட்டதுடன், அனைத்து ஆடுகளும் வெட்டப்பட்டன.

வேள்வி இடம்பெறும் இடத்திற்கு சென்று மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆடு வெட்டப்பட்டு அங்கிருந்த அகற்றப்பட்ட பின்னரே மற்றய ஆடு கொண்டு செல்லப்பட்டு வெட்டப்பட்டது.

இதன் போது 200 ற்கும் அதிகமாக கோழிகள் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டதுடன், 150 இற்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன.

இதெ வேளை, வேள்வியின் போது, இளவாலை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, பலாலி, பருத்தித்துறை அச்சுவேலி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .