2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாநகர சபை செய்தது அதிகம்; மேயர் யோகேஸ்வரி பற்குணராசா

Kanagaraj   / 2014 ஜூன் 15 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வடமாகாண சபை பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) மக்களுக்காக எவ்வித சேவைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் யாழ்.மாநகர சபை மக்களுக்காக தனது சேவைகளை திறம்படச் செய்கின்றது. அந்தளவு சேவையினை மாகாண சபையினரால் வழங்க முடியவில்லையென யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தார்.

பொறியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின் கீழுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியுதவியில் 100 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குருநகர்மாடி வீட்டுத் தொகுதி யினை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

1987 ஆம் ஆண்டிலிருந்து எமது மக்கள் செய்த தியாகங்கள் மூலம் எமக்கு வாய்ப்புக்கள் தற்போது கிடைத்துள்ளன. அந்த வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி பயன்களை அனுபவிக்க வேண்டும்.

சில அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுக்கள் மூலம் இளைஞர் யுவதிகளை சூடேற்றி அவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர். அவ்வாறு இல்லாமல் முன்னேற்றகரமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .