2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Super User   / 2014 ஜூன் 16 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். புத்தூர் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (16) காலையில் மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியினைச் சேர்ந்த சுந்தரலிங்கம் இராமச்சந்திரன் (55) என்ற நபரே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு தனது குடும்பத்தினருடன் கதைத்துக்கொண்டிருந்து விட்டு படுக்கையறைக்குச் சென்றவர் திங்கட்கிழமை (16) காலை சடலமாகவே காணப்பட்டார் என குடும்பத்தினர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .