2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தங்கம் திருடியவருக்கு விளக்கமறியல்

Super User   / 2014 ஜூன் 16 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி தெற்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை (13) அதிகாலை 15 ½ பவுண் நகைகளைத் திருடிய நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா இன்று திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.

குறித்த நபரை அச்சுவேலி பொலிஸார் வெள்ளிக்கிழமை (13) கைது செய்து, திங்கட்கிழமை (16) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மேற்படி திருட்டுச்சம்பம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு இரவு உறங்கியுள்ளனர்.

இந்நேரத்தில் ஜன்னல் வழியாக, அருகிலிருந்து கதவின் திறப்பின் மூலம் வீட்டிற்குள் வந்து, சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி, சங்கிலி மற்றும் மோதிரங்கள் அடங்கலாக 15 ½ பவுண் நகைகளைத் திருடியுள்ளார்.

சத்தம்கேட்டு வீட்டிலிருந்த பெண்ணொருவர் கூக்குரலிட்டதையடுத்து குறித்த திருடன் தப்பியோடியுள்ளான்.

இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சுவேலி பொலிஸார், மோப்பநாயின் உதவியுடன் குறித்த வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் இருந்த திருடனை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் போது தான் திருடிய நகைகளை குறித்த வீட்டின் வளவிற்குள் விட்டுச்சென்றதாகவும், தான் வவுனியாவில் இருந்து வந்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .