2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தங்குகூசி வலைகள் எரிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 17 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். சாவகச்சேரி கச்சாய்க் கடற்பகுதியில் இன்று திங்கட்கிழமை (17) மீட்கப்பட்ட 14 தொகுதி தங்குகூசி வலைகளையும் அழிக்கும் படி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய குறித்த வலைகளை காக்கைதீவிற்கு அண்மித்த பகுதியில் வைத்து தீ மூட்டி எரித்ததாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கச்சாய் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாக நீரியல் வளத்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த கடற்பகுதியில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 14 வலைத் தொகுதிகளை நீரியல் வளத்துறையினர் மீட்டனர்.

குறித்த வலைகளை அங்குள்ள மீனவர்கள் எவரும் உரிமை கோராத நிலையில் குறித்த வலைகளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .