2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சித்திரப் பாடப் பயிற்சி

Kanagaraj   / 2014 ஜூன் 17 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன் 

அமெரிக்காவிலிருந்து வருகை தந்த பேராசிரியரான ஜெனிதா கரத் மற்றும் யோகமணி அழகரத்தினம் ஆகியோர் இணைந்து, சாவகச்சேரி தேவாலய முன்பள்ளி மாணவர்களுக்கான சித்திரப்பாட பயிற்சிகளை இன்று செவ்வாய்க்கிழமை (17) வழங்கினார்கள்.

இதன்போது, சிறுவர்களால் இலகுவாக வரையப்படக்கூடிய சித்திரங்கள் மற்றும் சித்திரம் வரைவதற்கான நுட்பங்களை எவ்வாறு கையாள்வது போன்றவை செய்கை விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும், ஏற்கனவே மல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களிலுள்ள சிறார்களுக்கும் மாணவர்களுக்கும் சித்திரப் பயிற்சிகளை வழங்கியிருந்ததாக சாவகச்சேரி தேவாலய வணபிதா எஸ்.செல்வநாயகம் தெரிவித்தார்.



 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .