2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 18 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலயத்திற்கு 4 பாடங்களுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்களை வடமாகாண கல்வி அமைச்சு நியமித்துள்ளது என வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா புதன்கிழமை (18) தெரிவித்தார்.

வலிகாமம் கல்வி வலயத்தில் 10 பாடங்களிற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கான காடர் (பணியாற்றுவதற்கான அனுமதி) காணப்பட்ட போதிலும், இதுவரையில் 6 பாடங்களிற்கான உதவிக் கணிப்பாளர்களே கடமையாற்றி வந்தனர்.

இது தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து, 4 பாடங்களுக்குமான உதவிக் கல்விப் பணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு கடந்த வருடம் (2013) வடமாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன் அடிப்படையில் பரிசீலனைகள் செய்யப்பட்டு தற்போது 4 பாடங்களுக்கும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் இம்மாதத் தொடக்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிதார்.

அந்த வகையில், உடற்கல்விப் பாடத்திற்கு திருமதி கோசலை குணபாலசிங்கமும், சமூக விஞ்ஞானப் பாடத்திற்கு லதீஸ்கிறேஸ் விக்டர் ஜெயக்குமாரும், வர்த்தகப் பாடத்திற்கு தில்லையம்பலம் உதயகுமாரும், முறைசாரா கல்விப் பாடத்திற்கு கே.கனகேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .